» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை தடுப்பு திட்டம்: மத்திய அரசின் நிதியுதவி பெற தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

புதன் 11, ஜனவரி 2017 3:59:55 PM (IST)

போதை மற்றும் மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு தடுப்பு திட்டத்தினை செயல்முறைப்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,மத்திய அரசின் நிதியுதவியினை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசு மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை இணைந்து 1985-86 முதல் போதை தடுப்பு திட்டத்தினை செயல்முறைப்படுத்தி வருகிறது. 

அதன் முக்கிய குறிக்கோள் மதுநுகர்வுக்கு அடிமைப்பபடுதல் மற்றும் மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றால் ஏற்படும் தீங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலமாக கொண்டு செல்லுதல் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து, ஊக்குவித்தல், ஆலோசணை வழங்குதல், போதைக்கு அடிமையானதிலிருந்து விடுவித்தல், மறுவாழ்வு அளித்தல் போன்ற சமூகம் சார்ந்த சேவைகளை வழங்கி அவர்களை முழுமையான நபர்களாக மாற்றுதல் ஆகும்.

நுகவோர் விலை குறியீடு கணிசமாக உயர்ந்துள்ளதால், 2008ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட இத்திட்டத்திற்கான செலவீனத்தொகையினை தற்போது மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. அதன் விபரம் http://socialijustice.nic.in/pdf/sch-drug-1115.pdf என்ற வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளபடி, போதை மற்றும் மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு தடுப்பு திட்டத்தினை செயல்முறைப்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 2015-2016 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதியுதவினை பெற ஏதுவாக தங்களது கருத்துருவினை இரு பிரதிகளாக "இயக்குநர், சமூகப்பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை – 600 010, (தொலைபேசி எண்.26426421 / 26427022)" என்ற முகவரிக்கு அனுப்பிடவேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education

Sterlite Industries (I) Ltd

New Shape Tailors


Nalam Pasumaiyagam


selvam aqua


Universal Tiles Bazar


Johnson's Engineers



Thoothukudi Business Directory