» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் காயம்

புதன் 11, ஜனவரி 2017 3:48:54 PM (IST)

திருச்செந்தூரில் கார் - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 3பேர் காயம் அடைந்தனர்

கர்நாடகா மாநிலம் ஆஸ்தன் பகுதியை சேர்ந்த 12 பேர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு வேனில் புறப்பட்டனர். நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பின்னர், அவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். சாமி தரிசனம் முடித்து விட்டு நள்ளிரவு 11.30 மணி அளவில் சபரிமலைக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டனர். நள்ளிரவில் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த வேன் மீது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. 

இதில் பலத்த சேதம் அடைந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 3 அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் போலீசார் விரைந்து வந்து காய மடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam

selvam aqua







Thoothukudi Business Directory