» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்தோர் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதன் 11, ஜனவரி 2017 3:17:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்தோர் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கு 2016-2017ம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தற்பொழுது தன்னர்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என ஆணை பெறப்பட்டுள்ளது. 

பின்வரும் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.  18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.

பெண்மணியின் சாதனை குறித்த கையேடு இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 13.01.2017 தகுதியுடையவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், 5A, டூவிபுரம் 11 வது தெரு, (சங்கர நாராயணன் பிள்ளை பூங்கா பின்புறம்) தூத்துக்குடி -628003. தொலைபேசி எண்: 0461-2325606


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




selvam aqua

Johnson's Engineers


CSC Computer Education

New Shape Tailors


Panchai Dairy


Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory