» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேராயர் தேர்வுக்கான தேர்தல் திடீர் ஒத்திவைப்பு

புதன் 11, ஜனவரி 2017 10:17:49 AM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப் பேராயர் பெயர் பட்டியல் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற இருந்த நிலையில் திடீர் என ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் பெயர் பட்டியல் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜன 12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, இருந்தது. நாசரேத் சேகர குருவானவர் தேவசகாயம், ஆனந்தபுரம் சேகரகுரு நவராஜ், பழனியப்பபுரம் குருவானவர் தமிழ்செல்வன், பிரகாசபுரம் குருவானவர் தாமஸ், ஒய்யான்குடி குருவானவர் கோல்டுவின், நாலுமாவடி குருவானவர் மர்காஷிஸ் வெஸ்லிடேவிட், ஸ்பிக்நகர் குரு வானவர் அகஸ்டின் கோயில்ராஜ், சிதம்பரநகர் பி.பி.ஸ்டீபன்நீல், முதலைமொழி குருவானவர் அண்ட்ரூ கிறிஸ் டோபர், சாயர்புரம் குருவானவர் குரோவ்ஸ்பர்னபாஸ், பிரைண்ட்நகர் குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்ட்ராக், புதுக்கோட்டை குருவானவர் சாமுவேல் தாமஸ் உள்பட 12 குருவானவர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து தேர்தலுக்கான வாக்குகளைசேகரித்தும் வந்தனர்.

இந்தநிலையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன், குருத்துவ செயலாளர் ஜெ.எஸ்.தேவராஜ் ஞானசிங் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 201-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி நடைபெறுவதாயிருந்த தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் நியமனத்திற்கான பெயர் பட்டியல் தேர்வு செய்வதற்கான சிறப்பு பெருமன்ற கூட்டம் தேர்தல் சார்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் நாளை நடைபெற இருந்த தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப பேராயர் பெயர் பட்டியல் தேர்வு செய்வதற்கான தேர்தல் திடீர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தோமாJan 11, 2017 - 06:23:39 PM | Posted IP 157.5*****

ஒரு வேலை சசிகலா வேண்டாம் என்று சொல்லி விட்டதா.?

LazarJan 11, 2017 - 05:14:30 PM | Posted IP 61.3.*****

தேவனுடைய அபிஷேகம் சவுலைவிட்டு விலகினதை சவுல் அறியாதிருந்தான் .தேவன் தாவிதை தெரிந்துகொண்டார்

நல்லவன்Jan 11, 2017 - 04:50:31 PM | Posted IP 165.2*****

சட்ட மன்ற தேர்தலோடு சேர்த்து வைத்து கொள்ளவும் ..

JebaJan 11, 2017 - 12:42:12 PM | Posted IP 117.2*****

பிஷப் கண்ணீர் யாரையும் விடாது

GnanarajJan 11, 2017 - 12:41:09 PM | Posted IP 117.2*****

இந்த பாய்லகளை விரட்டி அடிங்க

KumarJan 11, 2017 - 12:39:55 PM | Posted IP 117.2*****

நம்ம பிஷப் இன்னும் உயிரோடுதான் இருக்கார்

RajeshJan 11, 2017 - 12:38:46 PM | Posted IP 117.2*****

எல்லாம் பணம் தின்னும் டெவில்ஸ்.இவனுகளுக்க பிஷப் பதவி வேண்டுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals
Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing
Thoothukudi Business Directory