» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குத்துச்சண்டை போட்டியில் நடந்தது என்ன ? : சங்க செயலாளர் பரபரப்பு பேட்டி

வெள்ளி 6, ஜனவரி 2017 6:47:13 PM (IST)

துாத்துக்குடியில் குத்துச்சண்டை போட்டியின் போது வீராங்கனை மயங்கி விழுந்து இறந்தது விளையாட்டு போட்டிகள் முறையாக தான் நடத்தப்படுகிறதா என கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளம், மாதவன் நகரைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகள் மாரீஸ்வரி (14). இவர் தூத்துக்குடி சோரீஸ்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். குத்துச்சண்டை வீராங்கணையான இவர் இன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் அரசு சார்பில் நடைபெறும் மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்ட போது மயங்கி விழுந்து இறந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விளையாட்டுதுறையில் சாதிக்க நினைக்கும் பல வீரர் வீராங்கனைகளுக்கு இங்குள்ள பல தடைகளை தாண்டி வெற்றி பெறுவது என்பதே போட்டியில் ஜெயிப்பதை விட கஷ்டமான விஷயமாகும். அந்தளவுக்கு விளையாட்டு போட்டிகள் ஏனோ தானோவென நடப்பதாக கூறுகின்றனர்.

துாத்துக்குடியில் நடந்த இச்சம்பவம் மட்டுமல்ல. உலகமே உற்று கவனிக்கும் ஒலிம்பிக் போட்டியில் கூட மராத்தான் வீராங்கனையான ஜெய்ஷா தனக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் தண்ணீர், குளுக்கோஸ் போன்றவை தரப்படவில்லை என கூறியதிலிருந்தே இந்தியாவில் விளையாட்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம். பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனும் தனக்கு இந்திய பாராலிம்பிக் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை எனவும் தனது பயிற்சியாளர் தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார் என கூறியிருந்தார். 

மேலும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஏற்ப அதில் பங்கேற்கும் வீரர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும், சாப்பிட கூடாது என விதிமுறைகள் உண்டு.அதே போல் விளையாட்டு வீரர்களுக்கு பல சலுகைகளும் நிதிஉதவிகளும் அரசால் வழங்கப்படும். அதுவும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது கேள்விக்குறிதான். விளையாட்டு போட்டி நடக்கும் போது தகுந்த முன்னேற்பாடுகளுடனும் பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற வேண்டும்.ஆனால் துாத்துக்குடியில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது அவ்விதிகள் கடைபிடிக்கப்பட்டதா என கேள்வி எழுகிறது. 

இது குறித்து துாத்துக்குடி குத்துச்சண்டை போட்டி சங்கசெயலாளர் ஞானதுரை கூறுகையில், போட்டி முடிந்து இறங்கி வந்த பின்பு மயங்கி விழுந்து தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உடனே அவரது பெற்றாேர்கள் விஇ ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவிக்கு ஊசி போடப்பட்டுள்ளது. அப்போது அப்பெண்ணுக்கு இதயதுடிப்பு இருந்துள்ளது. பின்பு படிப்படியாக குறைந்து அப்பெண் இறந்து விட்டார்.

மேலும் போட்டி நடைபெறும் இடத்தில் முதலுதவி சிகிச்சைக்கான முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என நமது நிருபர் கேட்டதற்கு அவ்வாறு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை எனவும் பொதுவாக தனியார் நிகழ்ச்சிகள் நடந்தாலே அங்கு செவிலியர் மற்றும் டாக்டர்கள் இருப்பது வழக்கம். ஆனால் இன்று எந்த மருத்துவ வசதிகளும் செய்யப்படவில்லை. ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை என்றார்.

வரும் காலங்களிலாவது இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு, சம்பந்தப்பட்ட விளையாட்டு மற்றும் அரசு அதிகார்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ முன்னேற்பாடு வசதிகளை செய்து தர‌வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



CSC Computer Education

Johnson's Engineers


Sterlite Industries (I) Ltd


New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory