» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வாக்காளர்கள் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வியாழன் 5, ஜனவரி 2017 1:05:11 PM (IST)



துாத்துக்குடி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இன்று துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ரவிக்குமார் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜையா பெற்றுக்கொண்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 6,93,149 ஆண் வாக்காளர்கள் 7,14,276 பெண் வாக்காளர்கள் மற்றும் 82 திருநங்கைகள் சேர்த்து மொத்தம் 14,07,507 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 1562 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவ்வாக்குச்சாவடிகள் 857 மையங்களில் அமைந்துள்ளது. 

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான வரும் ஜனவரி 25 ம் தேதி அந்தந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் அந்தந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்படும். மேலும் ஜனவரி 1 2017-ல் 18 வயது நிறைவு பெற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்ய தவறியவர்கள் தற்போது வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம் -6-ல் விண்ணப்பத்தை அளிக்கலாம். ராணுவம் மற்றும் துணைப்படைகளில் பணிபுரியும் இராணுவத்தினர் தங்கள் விருப்பத்திற்கேற்ப தாங்கள் குடியிருக்கும் பகுதியில் பொது வாக்காளர்களாக சேர படிவம்-6-ல் விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். 



அது போல் துாத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலத்தில் துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப்  வெளியிட்டார். இதில் துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் தாசில்தார்கள் கலந்து காெண்டு பட்டியலை பெற்று கொண்டனர்.


மக்கள் கருத்து

சாமிJan 5, 2017 - 02:08:45 PM | Posted IP 59.93*****

ஆமாம் - இவருக்கு அங்கு என்ன வேலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

selvam aqua

Panchai Dairy

Johnson's Engineers

Black Forest Cakes






Thoothukudi Business Directory