» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திறனாய்வு தேர்வு: ஊரக பகுதி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திங்கள் 11, ஜூலை 2016 8:54:22 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப்பகுதி மாணவர்கள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016–ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வுக்கு ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016–17–ம் கல்வியாண்டில் தொடர்ந்து படித்து, தற்போது 9–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் தகுதி உடையவர்கள். விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய்த் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும். 

நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிக்கும் மாணவ–மாணவிகள் தேர்வு கட்டணம் ரூ.5, சேவைக்கட்டணம் ரூ.5 ஆக மொத்தம் ரூ.10 செலுத்த வேண்டும். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்த்து கட்டணத்தை தலைமை ஆசிரியர் மூலம் சம்பந்தப்பட்ட முநகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது,..தன்மை கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8–ந் தேதி கடைசிநாள் ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் ஆக மொத்தம் 100 பேருக்கு 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் காலத்துக்கு உதவித்தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆதிAug 12, 2017 - 02:12:00 PM | Posted IP 168.2*****

இடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



crescentopticals




Thoothukudi Business Directory