» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் பத்திரிகை ஆசிரியர் கைது எதிரொலி: இரு கட்சியினர் மோதல் - 3 பேர் அடித்துக் கொலை

வெள்ளி 12, ஏப்ரல் 2013 3:19:21 PM (IST)

பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டதை அடுத்து,வங்கதேசத்தில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த 3 பேர் அடித்து கொல்லப்பட்டனர். போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

முகமது நபிகளை பழித்து இணையதளத்தில் சிலர் செய்திகள் வெளியிடு வதாக வங்க தேசத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதை கண்டித்தும், இஸ்லாம் மதத்தை பழித்து செய்தி வெளியிடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. 

இந் நிலையில் இபாசட் இ இஸ்லாம் என்ற அமைப்பினர் கடந்த 8ம் தேதி பந்த் நடத்தினர். அப்போது நடந்த கலவரத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர் . எனினும், மதத்தை பழிப்பவர்களை தண்டிக்க புதிய சட்டம் தேவையில்லை. இப்போதுள்ள சட்டமே போதும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா திட்டவட்டமாக கூறினார். 

இதற்கு போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகை யில் தவறான செய்திகளை வெளியிட்டதாக கூறி பத்திரிகை ஆசிரியர் ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியினருக்கும், பழமை வாத கட்சியான ஜமாத் இ இஸ்லாமி கட்சியினருக்கும் இடையே சிட்டகாங் மாவட்டம் புஸ்பர் நகரில் திடீர் மோதல் ஏற்பட்டது. 

இதில் அவாமி லீக் கட்சியினர் 3 பேர் அடித்து கொல்லப்பட்டனர்.குல்னா என்ற இடத்தில் கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.இதனால் பதற்றம் நீடிக்கிறது.


மக்கள் கருத்து

நடவடிக்கை தேவைதிங்கள் 15, ஏப்ரல் 2013 - 02:09:55 PM

எந்த மதத்தினராயினும் பாதிக்கப்படுகிரபோது அங்கே பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழன்சனி 13, ஏப்ரல் 2013 - 08:02:19 AM

வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் தாக்கப்பட்டு வருகிண்டனர், இந்திய அரசு வாய் மூடி மௌனமாய் இருக்கிறது. பத்திரிகைகளும் ஹிந்துக்கள் தாக்கப்படும் செய்தியை வெளியிடாமல் ஒருதலை பட்சமாக செயல் படுகின்றது. உலகில் உள்ள ஹிந்துகளுகாக யார்தான் குரல் கொடுப்பார்? இந்திய அரசு உடனடியாக வங்கதேச ஹிந்துகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory