» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வெள்ளி 26, மே 2023 10:48:16 AM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஜப்பான் சென்றார். ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் கென் பாண்டோவை முதல்வர் சந்தித்து சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
மேலும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்பிலேட்டர் (Airbag Inflator) தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்: கிம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:42:02 PM (IST)

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:21:48 PM (IST)

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் பலி!
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:44:18 AM (IST)

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:41:26 AM (IST)

ஹர்தீப் கொலை பற்றி என்னிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
புதன் 27, செப்டம்பர் 2023 9:55:47 AM (IST)

ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)
