» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் நிலநடுக்கம் : 9 பேர் உயிரிழப்பு! 100க்கும் மேற்பட்டோர் காயம்
புதன் 22, மார்ச் 2023 11:51:52 AM (IST)
பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதெசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு நேரத்திலும் வெளியில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை ஒப்பந்தம்
புதன் 31, மே 2023 10:33:33 AM (IST)

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபர் உடல்நிலை கவலைக்கிடம்!!
திங்கள் 29, மே 2023 5:08:17 PM (IST)

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை: ஜப்பான் அரசு ஒப்புதல்
சனி 27, மே 2023 5:27:34 PM (IST)

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வெள்ளி 26, மே 2023 10:48:16 AM (IST)

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை
வியாழன் 25, மே 2023 10:38:58 AM (IST)

ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க பிரதமர் உறுதி
புதன் 24, மே 2023 4:48:01 PM (IST)
