» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்கா அங்கீகாரம்
வியாழன் 16, மார்ச் 2023 5:36:50 PM (IST)

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது.
அமெரிக்க செனட் சபையில் செனட் உறுப்பினர்கள் பில் ஹேகர்டி, ஜெப் மெர்க்லி ஆகியோர் இருதரப்பு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தோளோடு தோள் நிற்க வேண்டியது அமெரிக்காவின் கடமை ஆகும்.
இந்த இருதரப்பு தீர்மானம், இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரிக்கிறது. அசல் எல்லை கோட்டு பகுதியை தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் சீனாவின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்க-இந்திய உறவு மேலும் வலுப்படுத்தப்படும். மேலும், மெக்மோகன் கோட்டை சீனாவுக்கும், அருணாசல பிரதேசத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கிறோம்.
தற்போதைய எல்லைப்பகுதி நிலவரத்தை மாற்ற படைபலத்தை பயன்படுத்துவது, கிராமங்களை உருவாக்குவது, அருணாசலபிரதேச கிராமங்களுக்கு மாண்டரின் மொழி பெயரை பயன்படுத்தி வரைபடம் வெளியிடுவது ஆகிய சீனாவின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம். சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பாகிஸ்தான், ரஷியா இரங்கல்!
சனி 3, ஜூன் 2023 4:51:02 PM (IST)

பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை: மனிதாபிமான நடவடிக்கை!
சனி 3, ஜூன் 2023 12:38:25 PM (IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார்: வெள்ளை மாளிகை
சனி 3, ஜூன் 2023 8:08:29 AM (IST)

சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை கரம்பிடித்தார் ஜோர்டன் பட்டத்து இளவரசர்!
வெள்ளி 2, ஜூன் 2023 11:33:45 AM (IST)

இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் தொடங்கியது!
வியாழன் 1, ஜூன் 2023 4:40:58 PM (IST)

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)
