» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வட கொரியா 7ஆவது அணுஆயுத சோதனை நடத்தினால்.... அமெரிக்கா எச்சரிக்கை..!!
செவ்வாய் 14, மார்ச் 2023 11:23:45 AM (IST)
வட கொரியா 7ஆவது அணு ஆயுத சோதனையை கொரியா பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. அண்மையில் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை நகரமான சின்போவில் இருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகள் வீசப்பட்டதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தென் கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும் வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தென்கொரியா மற்றும அமெரிக்க அரசுகள் சந்தேகித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். வடகொரியா 7-வது அணுகுண்டு சோதனையை நடத்தினால், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று நெட் பிரைஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










