» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்
திங்கள் 13, மார்ச் 2023 10:19:14 AM (IST)

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தியா மற்றும் ரஷியா இடையேயான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின்படி, ரஷியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் இந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கோவா, அமிர்தசரஸ் மற்றும் ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களுக்கு விமானங்களை இயக்க முடியும். இதேபோன்று, இந்தியாவில் இருந்து ரஷியாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட 6 இடங்களுக்கு விமான சேவையை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 7-ந்தேதி மேம்படுத்தப்பட்ட அறிவிப்பின்படி இந்த நடைமுறை பின்பற்றப்படும். எனினும், இதுவரை இருந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையானது 52 ஆக இருந்தது.
இந்நிலையில், வாராந்திர ரஷிய விமான சேவை எண்ணிக்கையை 52-ல் இருந்து 64 ஆக அதிகரிக்க இந்தியா ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கான இருதரப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கான வாராந்திர ரஷிய விமான சேவை ஒப்புதலை முழு அளவில் பயன்படுத்துவதற்கான நடைமுறை அமலுக்கு வர சில காலம் ஆகும் என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










