» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி: ஜெர்மனில் விநோதம்!
சனி 11, மார்ச் 2023 5:27:12 PM (IST)

ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது.
அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை. இருப்பினும், இந்த அனுமதி வியப்பை தந்தாலும், அந்நாட்டினர் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










