» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் தற்கொலை பயங்கரவாத தாக்குதல்: ஆளுநர் படுகொலை!
சனி 11, மார்ச் 2023 4:22:57 PM (IST)

ஆப்கானிஸ்தானில் ஆளுநர் அலுவலகத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் ஆளுநர் உட்பட 3பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலையில், பால்க் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்த தாக்குதலில் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் இருவர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில் ஆவார். இவர் இதற்கு முன்பு கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் அவர் பால்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










