» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீன நாட்டின் அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஷி ஜின்பிங் தேர்வு!
வெள்ளி 10, மார்ச் 2023 11:32:42 AM (IST)

சீன நாட்டின் அதிபராக ஷி ஜின்பிங்(69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14-வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்ய ஆதரவளித்துள்ளனர்.
மேலும், சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கிறார். மீண்டும் 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிக முறை ஆட்சி செய்த பெருமையை பெறுகிறார். ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










