» செய்திகள் - விளையாட்டு » உலகம்
துருக்கியில் சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1,300 பேர் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 3:17:08 PM (IST)

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1,300 பேர் உயிரிழந்தனர். பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நில அதிர்வும் ஏற்பட்டது.
அதன் தாக்கம் அளவுகோலில் 6.7 ரிக்டராக பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், இராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. பூகம்பத்தால் இதுவரை 1,300 -க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பூகம்பம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போதும் ”நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். காசியன்டேப் உள்ளிட்ட நகரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூகம்ப பாதிப்புகளை சரி செய்ய துருக்கிக்கு இஸ்ரேல் உதவ தயார்” என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்: இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "துருக்கியில் நேரிட்ட பூகம்பத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. துருக்கியின் அண்டை நாட்டையும் இந்த பூகம்பம் பாதித்துள்ளது. இந்தச் சூழலில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியாவின் 140 கோடி மக்களின் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் : 9 பேர் உயிரிழப்பு! 100க்கும் மேற்பட்டோர் காயம்
புதன் 22, மார்ச் 2023 11:51:52 AM (IST)

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,893 கோடிக்கு ஆயுதங்கள்: அமெரிக்கா முடிவு!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:23:22 PM (IST)

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து பின்லாந்து முதலிடம்: இந்தியா..?
செவ்வாய் 21, மார்ச் 2023 3:42:22 PM (IST)

கரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 19, மார்ச் 2023 8:04:38 PM (IST)

போர்க் குற்றத்தைப் புரிந்ததாக புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் : பைடன் வரவேற்பு
சனி 18, மார்ச் 2023 4:37:40 PM (IST)

உக்ரைனில் ரஷியா குண்டு வீச்சு: 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம், ஒருவர் உயிரிழப்பு!
வெள்ளி 17, மார்ச் 2023 12:17:09 PM (IST)
