» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் துபாய் மருத்துவமனையில் காலமானார்
ஞாயிறு 5, பிப்ரவரி 2023 6:32:30 PM (IST)
துபாய் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவினைக்கு முன் ஆகஸ்ட் 11, 1943 இல் இந்தியாவின் தில்லியில் பிறந்த பர்வீஸ் முஷாரஃப். பிரிவினைக்குப் பிறகு முஷாரஃப் குடும்பம் 1947 இல் புது தில்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு குடிபெயர்ந்தது. அவர் 1964 இல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் குவெட்டாவில் உள்ள ராணுவப் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரஃப் இருந்தார். இவர் ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கலைத்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார். 2001 முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரஃப், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் : 9 பேர் உயிரிழப்பு! 100க்கும் மேற்பட்டோர் காயம்
புதன் 22, மார்ச் 2023 11:51:52 AM (IST)

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,893 கோடிக்கு ஆயுதங்கள்: அமெரிக்கா முடிவு!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:23:22 PM (IST)

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து பின்லாந்து முதலிடம்: இந்தியா..?
செவ்வாய் 21, மார்ச் 2023 3:42:22 PM (IST)

கரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 19, மார்ச் 2023 8:04:38 PM (IST)

போர்க் குற்றத்தைப் புரிந்ததாக புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் : பைடன் வரவேற்பு
சனி 18, மார்ச் 2023 4:37:40 PM (IST)

உக்ரைனில் ரஷியா குண்டு வீச்சு: 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம், ஒருவர் உயிரிழப்பு!
வெள்ளி 17, மார்ச் 2023 12:17:09 PM (IST)
