» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாக்.மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 83பேர் உயிரிழப்பு - 150பேர் படுகாயம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:03:22 PM (IST)

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
மேலும் குண்டுகள் வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள். இந்த தாக்குதலில் 46 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காயமடைந்த ஏராளமானோர் பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் இறந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் இலவச பொருட்களை வாங்க கூட்ட நெரிசல்: குழந்தைகள் உள்பட 12 பேர் பலி!
சனி 1, ஏப்ரல் 2023 3:30:12 PM (IST)

போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி
வெள்ளி 31, மார்ச் 2023 4:50:48 PM (IST)

உக்ரைன் போரை என்னால் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியும்: ட்ரம்ப்
வியாழன் 30, மார்ச் 2023 3:22:52 PM (IST)

அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட நீதிபதி பணி நீக்கம்!!
புதன் 29, மார்ச் 2023 12:07:25 PM (IST)

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா
செவ்வாய் 28, மார்ச் 2023 12:07:42 PM (IST)

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் நிறுவ ரஷ்யா முடிவு: ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை
திங்கள் 27, மார்ச் 2023 12:38:20 PM (IST)
