» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளி விண்வெளி வீரருக்கு முக்கிய பதவி

சனி 28, ஜனவரி 2023 4:51:59 PM (IST)

அமெரிக்க விமானப்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும். 45 வயதான ராஜா சாரி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் 'க்ரூ-3' என்ற நாசாவின் விண்வெளி திட்டத்திற்கு தலைவராக உள்ளார்.

அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருந்த ராஜா சாரி, 461-வது விமானப்படை குழுவின் கட்டளை அதிகாரியாகயும், அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எப் 35-ன் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory