» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவூதி அரேபியாவில் கொட்டித் தீர்த்த கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!
வெள்ளி 25, நவம்பர் 2022 11:59:16 AM (IST)

சவூதி அரேபியாவில், வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜெட்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திடீரென பெய்த கனமழையில் நேரிட்ட அசம்பாவிதங்களில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர். பாதுகாப்புக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அவசியம் இன்றி மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று மெக்கா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான ஜெட்டாவில் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களுக்கு கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் கருதி, கனமழை தொடங்கியபோதே, மெக்கா யாத்திரை செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டது. கனமழை நின்ற பிறகே சாலை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பல பகுதிகளில் வானிலை காரணமாக நேற்று விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளன. ஜெட்டாவில் தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கி: வீடு, குடும்பத்தை இழந்து தவிக்கும் மக்கள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:11:04 PM (IST)

இந்தியா முன்னேறுகிறது; பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறி : இம்ரான் கான்
புதன் 8, பிப்ரவரி 2023 4:36:21 PM (IST)

2ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போயிங் விமான நிறுவனம் முடிவு!
புதன் 8, பிப்ரவரி 2023 10:50:35 AM (IST)

துருக்கி விரைந்தது இந்திய மனிதாபிமான குழு: முதல் தவணை நிவாரணம் வழங்கல்!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:54:11 PM (IST)

அமெரிக்க பாடகிக்கு 4 கிராமி விருதுகள்: இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:42:09 PM (IST)

துருக்கியில் சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1,300 பேர் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 3:17:08 PM (IST)
