» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தைவான் மீது கைவைத்தால் அமெரிக்க ராணுவம் தக்க பதிலடி தரும்: சீனாவுக்கு பைடன் பகிரங்க எச்சரிக்கை!

திங்கள் 19, செப்டம்பர் 2022 4:42:38 PM (IST)

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் தக்க பதிலடி தரப்படும் என்று அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்திருக்கிறது. 

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு மறைமுக தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதற்கு பின்னரும், அமெரிக்க எம்.பி.க்களும், அமெரிக்க மாகாண ஆளுநர்களும், தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அமெரிக்கா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில் தைவானுக்கு சுமார் 8,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அதிபர் ஜோ பைடன் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோ பைடன், தைவானை அமெரிக்க படைகள் பாதுகாக்கும் என்று கூறினார்.

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்க படை வீரர்கள் தைவானை பாதுகாப்பார்கள் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனால் நேர்காணலுக்கு பிறகு பேசிய வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்றார். தைவான் தன்னை தானே தற்காத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா ராணுவ உதவி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory