» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST)

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சையதிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதையடுத்து தற்போது லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதனிடையே, மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சஜீத் மஜீத் என்பவரையும் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மஜீத் தொடர்பான வழக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் மஜீத் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி மஜீத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மஜீத் சிறையில் அடைக்கப்பட்டான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory