» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் 133 பேரின் சாவுக்கு விமானியே காரணம்: கருப்பு பெட்டி மூலம் கிடைத்த பகீர் தகவல்..!!

புதன் 18, மே 2022 4:49:04 PM (IST)



சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.  

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம், வானில் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து வேண்டுமென்றே கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வௌியிட்ட அறிக்கையில், ‘கடந்த மார்ச் 21ம் தேதி அன்று குன்மிங்கிலிருந்து  குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த போயிங் 737-800 ஜெட்லைன் விமானம், வானத்தில் இருந்து  கீழே விழுந்து விபத்தில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலியாகினர். அந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட விவரத்தை அமெரிக்க  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி விமானம் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த போது கீழ்நோக்கி 9,075 அடிக்கு வெறும் 2.15 நிமிடங்களில் வந்துள்ளது. இதனை ஃப்ளைட் ரேடார் 24 என்ற  ஃப்ளைட் டிராக்கர் தெரிவித்துள்ளது. 

அடுத்த 20 வினாடிகளுக்குள் 3,225 அடி  உயரத்தில் விமானம் கீழ் நோக்கி வந்தது. பின்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது, அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி  விபத்துக்குள்ளாக்கியுள்ளார். விமானி அறையில் இருந்த யாரோ ஒருவர்  இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,  ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வௌியிட்ட அறிக்கை குறித்து சீன விமான நிறுவனம்  மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இன்னும் கருத்து  தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory