» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒமிக்ரான் வகை கரோனா : தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை

ஞாயிறு 28, நவம்பர் 2021 3:12:59 PM (IST)

புதிய வகை கரோனா பரவல் காரணமாக தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலங்கை பயணத்தடை விதித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் பரவி விட்டது.

இந்த வைரஸ் இதற்கு முன் கண்டறிப்பட்ட கரோனா வைரஸ் வகைகளை விட ஆபத்து மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே உலக நாடுகள் பலவும் இந்த வைரஸ் தங்கள் நாட்டுகள் நுழைவதை தடுக்கும் வகையில் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது.

அந்த வகையில் நமது அண்டை நாடான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்துள்ளது. இந்த தடை இன்று (ஞாயிறு) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 5 லட்சத்து 61 ஆயிரத்து 59 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும், 14,258 பேர் அந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"பேரழிவு ஏற்படுத்தாது" - இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து

புதிய வகை கரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய வகை கரோனா ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "இது பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.

"தடுப்பூசியால் கிடைக்கிற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். ஜலதோஷம், தலைவலி ஏற்படலாம். இதற்காக ஆஸ்பத்திரிக்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது இறக்கிற வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory