» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது

ஞாயிறு 21, நவம்பர் 2021 12:04:59 PM (IST)

அமெரிக்காவில்  18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது. 

உலகளவில் கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இங்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள மூத்த குடிமக்களுக்கு கரோனாவுக்கு எதிராக 3-வது டோசாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதன் தரவுகள், கரோனாவை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என காட்டி உள்ளன. இதையடுத்து 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடலாம் என்ற பரிந்துரையை சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி வாலன்ஸ்கி செய்தார்.

அதைத் தொடர்ந்து, அங்கு 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு தேசிய அளவில் 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. குளிர் காலத்தில் கரோனா தொற்று பரவலை குறைக்க 50 வயதுக்கு மேற்பட்டோர் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை எந்த வயதினர் போடுவது என்பதில் அமெரிக்காவில் ஒரு குழப்பம் நிலவியது. இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி, 18 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் ஆகி இருந்தால், பைசர் அல்லது மாடர்னா என இரு தடுப்பூசிகளில் எதுவாகிலும் ஒன்றை பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ளலாம்.

இதுபற்றி சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆலோசகர் டாக்டர் மேத்யூ டேலி கூறுகையில், "இது ஒரு வலுவான பரிந்துரை ஆகும். எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய விரும்புகிறேன்” என குறிப்பிட்டார். இதன்படி அமெரிக்காவில் 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்பட உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory