» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் அதிபராக செயல்பட்ட கமலா ஹாரிஸ்

சனி 20, நவம்பர் 2021 10:37:58 AM (IST)

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனுக்கு மயக்கவியல் சிகிச்சை அளிக்கப்பட்டதால் கமலா ஹாரிஸ் தற்காலிக அதிபராக செயல்பட்டார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார். 

இதனையடுத்து  கமலாவுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது. 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் இருக்கையில் கமலா ஹாரிஸ் அமரவில்லை எனவும் தற்காலிக அமெரிக்க  அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் மீண்டும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கினார். அமெரிக்காவில் பெண் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

RaniNov 20, 2021 - 12:18:10 PM | Posted IP 108.1*****

Thamilakatha alla.... Thamilakathai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory