» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: சூடானில் 15 பேர் பலி!

வெள்ளி 19, நவம்பர் 2021 11:31:51 AM (IST)



சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15பேர் உயிரிழந்தனர். 

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடான் நாட்டில் 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஹர்டோமின் பல்வேறு பகுதிகளில் நேற்று பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனால், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory