» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் 3-வது முறையாக பிரதமராக தேர்வு : ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதன் 22, செப்டம்பர் 2021 4:34:57 PM (IST)கனடா பிரதமராக 3-வது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையும், பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது ஆட்சி அமைப்பதற்கு 170 இடங்கள் தேவை என்கிற சூழலில் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்து, லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராகிறார்.  

கடந்த முறையைப் போன்று சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ பிரதமராவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் மக்கள் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தைத் தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கரோனா தொற்றை நாங்கள்தான் அழிக்கப் போகிறோம், கனடாவை நாங்கள்தான் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்  கனடா பிரதமராக 3-வது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியா - கனடா இடையேயான உறவு மேலும் வலுப்பட தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory