» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை: தலீபான்கள் வெறியாட்டம்

சனி 11, செப்டம்பர் 2021 12:30:27 PM (IST)

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தாலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், அங்கு விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபர் என பிரகடனப்படுத்தி உள்ளார்.

அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலீபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைப்பிடித்துள்ளனர். பின்னர் அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. 'அது அங்கேயே கிடந்து அழுக வேண்டும்' என தலிபான்கள் கூறியதாக அஸிசியின் உறவினர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory