» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக அளவில் கரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

வியாழன் 29, ஜூலை 2021 12:46:49 PM (IST)

உலக அளவில் கடந்த வாரம் கரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு : கடந்த வாரம் 69 ஆயிரம் கரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கரோனா புதிய பாதிப்புகள், 8 சதவீதம் அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது. இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது.  இவ்வாறு கூறியுள்ளது.


மக்கள் கருத்து

adminJul 29, 2021 - 02:15:49 PM | Posted IP 162.1*****

mooditu irungada

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thoothukudi Business Directory