» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெகாசஸ் சர்ச்சை: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செல்போனை மாற்றினார்!

வெள்ளி 23, ஜூலை 2021 12:30:50 PM (IST)

பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரான்ஸ் அதிபர் அண்மையில் தனது செல்போன் மற்றும் எண்ணை மாற்றியுள்ளார். 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று இமானுவேல் மேக்ரான் தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில், இமானுவேல் மேக்ரான்  தனது செல்போன் எண் மற்றும் செல்போனை மாற்றியுள்ளார். இமானுவேல் மேக்ரான் செல்போனை மாற்றியதால் அவரது போன் உளவு பார்க்கப்பட்டதாக அர்த்தமில்லை. 

கூடுதல் பாதுகாப்புக்காக மட்டுமே செல்போன் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இம்மானுவேல் மேக்ரானை தவிர, இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்கஅதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்தாக வெளியான செய்தி சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory