» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார் : வாடிகன் தகவல்

வியாழன் 8, ஜூலை 2021 5:32:07 PM (IST)

குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருவதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

போப் பிரான்சிஸ் (84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் கடந்த 4-ந்தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது. 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டது. இந்த ஆபரேஷனுக்குப்பின் அவர் உடல் நலம் தேறி வருவதாக வாடிகன் அறிவித்து உள்ளது.

இது குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி நேற்று கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நலம் வழக்கமான முறையிலும் மற்றும் திருப்திகரமாகவும் உள்ளது. அவர் உணவு எடுத்துக்கொள்கிறார்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வாழ்த்து கூறியிருப்பதாக வெள்ளை மாளிகை நேற்று கூறியிருந்தது. ஏராளமானோர் தனக்காக பிரார்த்தனை செய்வதுடன், வாழ்த்தும் தெரிவித்து வருவது கண்டு போப் ஆண்டவர் நெகிழ்ந்து போயிருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory