» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துப்பாக்கி முனையில் 150 பள்ளிக்குழந்தைகள் கடத்தல்: நைஜீரியாவில் பரபரப்பு

புதன் 7, ஜூலை 2021 10:19:29 AM (IST)நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக் குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க வந்த மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த திங்கள்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். 

இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஒரு பெண் ஆசிரியர் உள்பட 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் 150 பள்ளிக் குழந்தைகள் சிறைபடுத்தப் பட்டுள்ளனர்.  இதனையறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory