» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய விமானங்களுக்கான தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு : ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

வெள்ளி 2, ஜூலை 2021 5:40:34 PM (IST)

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 21 வரை தடை நீட்டித்து  ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 30 வரை விதிக்கப்பட்டிருந்த தடையானது ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம், நேபாளம், இலங்கை, வியந்நாம், நமிபியா, காங்கோ, உகாண்டா, லிபியா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாட்டு விமானங்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory