» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடல்

திங்கள் 21, ஜூன் 2021 8:46:05 AM (IST)ஈரான் நாட்டிலுள்ள ஒரே அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

ஈரான் மின்சார ஆற்றல் நிறுவனத்தைச் சோந்த அதிகாரி கொலாமலி ரக்ஷானிமெஹா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அவசரகால நடவடிக்கையாக அணுமின் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது. தொடா்ந்து மூன்று முதல் நான்கு நாள்கள் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் மின்தடை ஏற்படலாம் என்றார்.

ரஷிய உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்ன என்று அவா் தெரிவிக்கவில்லை. ஆனால், கடலோர புஷ்ஷொ நகரில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக மூடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory