» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் விமான விபத்து: டார்சன் பட நடிகர்- மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிர் இழப்பு!

திங்கள் 31, மே 2021 4:47:47 PM (IST)



அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த   மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

இதனிடையியே மூழ்கிய விமானத்தில் பிரபலமான டார்சன் படத்தில் நடித்த ஜோ லாரா- மற்றும் அவரது மனைவியும் பயணித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் இருவரும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும்  உள்ளூர் வாசிகளான 5பேர் உயிரிழந்தனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிர் இழந்ததும், அதேபோல் உட்டா மாகாணத்தில் நடந்த மற்றொரு விமான விபத்தில் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory