» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால்தான் இந்தியாவுடன் வர்த்தகம்: பாகிஸ்தான் முடிவு
சனி 3, ஏப்ரல் 2021 12:27:42 PM (IST)
ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கினால்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தை அனுமதிப்போம் என்று பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்தது.

பாகிஸ்தானில் சர்க்கரை விளைச்சல் குறைவாக உள்ளது. அதனால் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. வரும் ரமலான் மாதத்தில் பாகிஸ்தானில் கூடுதல் சர்க்கரை தேவைப்படும் அந்த கூடுதல் தேவையை ஈடு கட்டுவதற்காக அண்டை நாடான இந்தியாவில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யலாம் என்று பாகிஸ்தான் பொருளாதார ஒருங்கிணைப்பு கமிட்டி முடிவு செய்தது.
இந்த முடிவின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சர்க்கரை பருத்தி ஆகியவை இறக்குமதி செய்யப்படும் என்று பாகிஸ்தானின் புதிய நிதியமைச்சர் ஹம்மர் அஜார் அறிவித்தார். பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னரே இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை துவக்குவதில் பாகிஸ்தான் அமைச்சரவை ஒருமித்த கருத்துடன் இல்லை என்று பாகிஸ்தான் மனித உரிமை துறை அமைச்சர் ஷிரின் மஜாரி ட்விட்டர் மூலம் செய்தி பதிவு செய்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித். பாகிஸ்தான் மனித உரிமை துறை அமைச்சர் ஷிரின் மஜாரி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஏற்படுத்துவதோடு அதனை யூனியன் பிரதேசமாக இந்திய அரசு மாற்றிவிட்டது இந்தநிலையில் இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை துவக்குவது பொருத்தமான செயல் அல்ல எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பாகிஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது விதியை மீண்டும் இந்தியா சேர்த்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மட்டுமே இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் துவக்குவது பொருத்தமாக அமையும் என்று பாகிஸ்தான் அமைச்சரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பொருளாதார ஒருங்கிணைப்பு கமிட்டி ஏகமனதாக வழங்கிய பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 21, ஏப்ரல் 2021 10:23:12 AM (IST)

இந்தியாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுறுத்தல்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:27:08 PM (IST)

போரிஸ் ஜான்ஸனின் இந்திய வருகை ரத்து: பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:30:42 PM (IST)

இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகளும் ரத்து - ஹாங்காங் அரசு அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:18:04 AM (IST)

பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டம் எதிரொலி : பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
வெள்ளி 16, ஏப்ரல் 2021 3:44:03 PM (IST)

ஏழைநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குகிறது நியூசிலாந்து
வெள்ளி 16, ஏப்ரல் 2021 11:39:49 AM (IST)

saamyApr 9, 2021 - 04:04:14 PM | Posted IP 108.1*****