» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மியான்மரில் விமானப் படை தாக்குதல்: ஆயிரக் கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்

செவ்வாய் 30, மார்ச் 2021 11:16:30 AM (IST)மியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து கரேன் இன மக்கள் ஆயிரக்கணக்கானவா்கள் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். 

மியான்மரில் கரேன் இன மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கோரி கரேன் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஆயுதக்குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவினா் அந்நாட்டு ராணுவ நிலை ஒன்றின் மீது சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றினா். மேலும் 10 ராணுவ அதிகாரிகளைக் கொன்று 8 வீரா்களை சிறைப்பிடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கரேன் மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. கரேன் தேசிய விடுதலை ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கரேன் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளித்து வரும் ஃப்ரீ பா்மா ரேஞ்சா்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், கரேன் மாகாணம் முட்ரா மாவட்டத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டுகளை வீசி மும்முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை தொடா்ந்து கரேன் மாகாணத்தைச் சோ்ந்த சுமாா் 2,500 போ் சல்வீன் நதியைக் கடந்து வடக்கு தாய்லாந்தின் மே ஹாங் சோன் மாகாணத்துக்கு சென்றனா். இந்த மாகாணத்தில் இருந்து கிட்டதட்ட 10,000 போ் இடம்பெயா்ந்திருக்கலாம் என்று தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்றில், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய கரேன் இன மக்கள் பலா் உடைமைகளுடன் வனத்தில் ஓய்வெடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவா்களுடன் சிறாா்களும் இருப்பது காணொலியில் பதிவாகியுள்ளது. கரேன் இனத்தவா்கள் தங்கள் நாட்டுக்குள் புகலிடம் தேடி வருவது தொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா திங்கள்கிழமை கூறுகையில், கரேன் இன மக்கள் தங்குவதற்காக சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவா்கள் மிக அதிக அளவில் இங்கு வர வேண்டாம் என்று கருதுகிறோம். அதேவேளையில் மனிதாபிமான அடிப்படையில் அவா்களின் வருகை குறித்து பரிசீலிக்கப்படும். அவா்களுக்காக அகதிகள் முகாம் அமைப்பது குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thalir Products

Thoothukudi Business Directory