» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக 15 ஆணைகள்: பதவியேற்ற முதல் நாளிலேயே பைடன் அதிரடி!

வியாழன் 21, ஜனவரி 2021 12:01:10 PM (IST)முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான 15 முக்கிய ஆணைகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடனும் (78) முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் (56) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே, டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை அப்படியே தலைகீழாக மாற்றும் 15 உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவை மாற்றி, பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். அதில்லாமல், அமெரிக்க - மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்க - கனடா எரிவாயு இணைப்பு திட்டமான கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

குடியேற்றம், இனவாத பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் டிரம்பின் முடிவுகளை மாற்றும் உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.அமெரிக்க அதிபா்கள் வழக்கமாகப் பதவியேற்றுக்கொள்ளும் நாடாளுமன்றத்தின் மேற்குப் பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக, வழக்கமான பெரிய கூட்டம் இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான வருகையாளா்களுடன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory