» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்து

ஞாயிறு 10, ஜனவரி 2021 6:29:22 PM (IST)

இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு 62 பயணிகளுடன் ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் நேற்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில், ஜாவா கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல், மனித உடல் பாகங்களும் கண்டுடெடுக்கப்பட்டன. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஜாவா கடலில் விமானம் விபத்துக்குள்ளான இடமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.கடலில் கருப்பு பெட்டிகள் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கருப்பு பெட்டி மீட்கப்படும் பட்சத்தில் அதில் பதிவான விமானிகளின் உரையாடல்களை ஆய்வு செய்தால் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory