» செய்திகள் - விளையாட்டு » உலகம்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம்

சனி 9, ஜனவரி 2021 10:24:04 AM (IST)

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கி உள்ளதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருகிறது. 

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என அங்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.  

இலங்கை அரசின் செயலுக்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூறும் வகையில் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory