» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப் : ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல்
செவ்வாய் 24, நவம்பர் 2020 5:18:17 PM (IST)

அதிபர் தேர்தலில் தன் தோல்வியை அதிபர் டிரம்ப் ஒப்புகொண்டுள்ளார். புதிய அதிபரான ஜோ பிடன், ஆட்சி அமைப்பதற்கான அதிகார மாற்ற செயல்முறைகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி ஜோ பிடன் அதிபராக பதவி ஏற்கவுள்ளார். ஆனால் நடப்பு அதிபரான டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வந்தார்.
பரவலான தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து அதிபர் டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் தேர்தல் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு ஜோ பிடன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். டிரம்ப் கட்சியினரே அவரை தோல்வியை ஒப்புக்கொள்ளும்படி வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிர்வாக மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள போதும், ஜோ பிடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்து உள்ளார். அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, ஜோ பிடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
டிரம்பால் நியமிக்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பிடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிபருக்கான அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைகளை ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை.
தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். அதில் வெற்றியும் பெறுவோம் என அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ஜோ பிடனின் நிர்வாகத்தினருக்கு வெள்ளை மாளிகையின் அலுவலகங்கள் மற்றும் அரசு நிதியை பயன்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படும். மேலும் இனி ஜோ பிடனால் அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவும் முடியும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக 15 ஆணைகள்: பதவியேற்ற முதல் நாளிலேயே பைடன் அதிரடி!
வியாழன் 21, ஜனவரி 2021 12:01:10 PM (IST)

அதிபராக ஜோ பைடன் - துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு: வாஷிங்டனில் கோலாகல விழா
வியாழன் 21, ஜனவரி 2021 8:52:13 AM (IST)

ஜெர்மனியில் பிப்.14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு : அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவிப்பு
புதன் 20, ஜனவரி 2021 5:20:53 PM (IST)

கரோனா பரவலைத் தடுக்க சீனா உள்ளிட்ட நாடுகள் தவறிவிட்டன: நிபுணர் குழு குற்றச்சாட்டு
புதன் 20, ஜனவரி 2021 12:26:34 PM (IST)

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)
