» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் 3 நகரங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு: பரிசோதனை பணிகள் தீவிரம்!

செவ்வாய் 24, நவம்பர் 2020 10:51:16 AM (IST)

சீனாவின் 3 நகரங்களில் கடந்த வாரம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, லட்சக்கணக்கான மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சீனாவில் தோன்றிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை அங்கு 86,442 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 4,634 பேர் இறந்துவிட்டனர். இருப்பினும், அங்கு கரோனா தொற்று ஏறக்குறைய முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்நிலையில், தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான விமான நிலைய ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளானவர்கள் பணிபுரிந்த இடத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏராளமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷாங்காயில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலைய பணியாளர்கள் 17,719 பேருக்கு திங்கள்கிழமை காலையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தியான்ஜின் நகரில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரைச் சேர்ந்த 22 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட மன்சௌலி நகரில் கடந்த சனிக்கிழமை இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்நகரில் வாழும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கரோனா மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் பொது முடக்கம், பள்ளிகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory