» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அன்னபூர்ணா சிலை: கனடாவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை!

சனி 21, நவம்பர் 2020 5:18:16 PM (IST)

இந்தியாவின் வாரணாசி நகரிலிருந்து 100 ஆண்டுக்கு முன்பு திருடிச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை கனாடாவிலிருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.

கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் இந்த சிலை இருக்கிறது. இந்த சிலையை விரைவில் பல்கலைக்கழகம் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்க இருக்கிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த போது, வாரணாசியிலிருந்து அன்னபூர்ணா தேவி சிலை கனடாவுக்கு கடத்தப்பட்டது, நார்மென் மெக்கென்ஸி என்பவரால் உருவாக்கப்பட்ட கலைக்கூடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

சமீபத்தில் இந்தியக் கலைஞரும் ஆய்வாளருமான திவ்யா மேஹ்ரா இந்த சிலையை அடையாளம் கண்டு அதுகுறித்து ஆய்வு நடத்தியபோது, 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இந்த சிலை எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.இதையடுத்து, ரெஜினா பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் தலைவரும், துணை வேந்திருமான டாக்டர் தாமஸ் சேஸ், கனடாவுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை காணொலி மூலம் சந்தித்து பேசி இந்த சிலை குறித்த விவரத்தை தெரிவித்தார்.

மெக்கென்ஸி கலைக்கூடத்தின் பிரதிநிதிகள், கனடா சர்வதேச விவகாரம் மற்றும் எல்லைப்புற சேவை அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா பேசுகையில் " இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் அன்னபூர்ணா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை விளக்கும் சிலையை ரெஜினா பல்கலைக்கழகம் தாமாக முன்வந்து ஒப்படைப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் இந்த செயல், இந்தியா, கனடா இடையிலான உறவை மேலும் முதிர்ச்சியடைச் செய்து, வலுப்பெற வைக்கும்” எனத் தெரிவித்தார்.

வாரணாசியிலிருந்து கடந்த 1913-ம் ஆண்டு மெக்கென்ஸியால் இந்த சிலை இந்தியாவிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளரும், கலைஞருமான மேஹ்ரா தெரிவித்துள்ளார். இந்த சிலை வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு கோயிலிருந்து திருடப்பட்டு மெக்கென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் எனத் மெஹ்ரா தெரிவித்துள்ளார். பீடத்தில் அமர்ந்தநிலையில் கையில் பெரிய கிண்ணத்தையும் மற்றொரு கையில் அன்னம் வழங்கும் கரண்டியும் வைத்திருப்பதுபோன்று தேவிசிலை அமைந்துள்ளது. வாரணாசியில் இன்றும் கங்கைநதிக் கரைஓரத்தில் அன்னப்பூர்ணா தேவி கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

இவன்Nov 21, 2020 - 06:20:08 PM | Posted IP 162.1*****

வடை நாட்டுக்காரன் திருடுவதில் வல்லவன் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory