» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது: மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு!

புதன் 21, அக்டோபர் 2020 5:06:09 PM (IST)

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான  தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது. இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார்.

இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் - Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை இந்த சிறப்பு ஆணையம் இன்று வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory