» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜமால் கசோகியை கொல்ல உத்தரவிட்டதாக சவுதி பட்டத்து இளவரசர் மீது வழக்கு

புதன் 21, அக்டோபர் 2020 12:52:59 PM (IST)

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் காதலி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

பத்திரிகையாளர் ஜமால் கசோகி (59), சவுதி அரேபியாவின்   அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார்.  2017ஆம் ஆண்டில் சவிதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.  துருக்கி பெண்ணான ஹதீஜா  ஜென்கிஸை காதலித்தார். அவரி திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவுஆவணங்களைப் பெற 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள செளதி துணைத் தூதரகத்துக்கு சென்றார்.

ஆனால் திரும்பி வரவில்லை. இதைத்தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கசோகி கொல்லப்படும் முன்பு அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது காதலி ஹதீஜா ஜெங்கிஸ் மற்றும் கசோகி நிறுவிய டெமோக்ரசி பார் த அரப் வோர்ல்டு நவ் எனும் அமைப்பு சார்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.துருக்கி நாட்டை சேர்ந்த ஹதீஜா தமக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது மனுவில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory