» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: டிரம்ப் ஆவேசம்

திங்கள் 19, அக்டோபர் 2020 8:46:56 AM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என அதிபர் டிரம்ப் கூறினார்.

உலக அளவில் கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அங்கு கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அடுத்த மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ள அதிபர் டிரம்ப், மாகாண வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு, தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் டிரம்ப் பிரசாரம் செய்தார்.

அப்போது கரோனாவுக்கான சிகிச்சை முறை குறித்து பேசிய அவர், "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் (ஆன்டிபாடி) சிகிச்சை கரோனாவுக்கான சிறந்த சிகிச்சை என்று நான் நம்புகிறேன். எனவே நாங்கள் அதை இலவசமாக்க போகிறோம். அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா ஆன்டிபாடி சிகிச்சை இலவசமாக கிடைக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், நடக்கவிருக்கும் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் நாட்டில் கரோனா நிலைமை மிகவும் மோசமடையும் என குற்றம் சாட்டினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "ஜனநாயக கட்சியினர் கரோனா மீட்டெடுப்பை நிறுத்தி விடுவார்கள். ஜோ பைடன் நாட்டை மூடிவிடுவார். தடுப்பூசியை தாமதப்படுத்துவார். தொற்றுநோயை நீட்டிப்பார்” என சாடினார். முன்னதாக ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த பிரசார பேரணியில் பேசிய அதிபர் டிரம்ப் தேர்தலில் தான் தோல்வியுற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஆவேசமாக தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது. வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் நான் போட்டியிடுகிறேன். அவரிடம் தோற்று விட்டால் அப்புறம் எனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory