» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் பரவும் புதிய நோய் தொற்று : ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

ஞாயிறு 20, செப்டம்பர் 2020 12:23:14 PM (IST)

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்த தொற்றால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தி பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவை கொண்டு இருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் மால்டா காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். சிறிது காலம் கழித்து அந்த அறிகுறிகள் குறைந்துவிடும். என்றாலும், சில அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருக்கக்கூடியதாக மாறக்கூடும்.

இந்த வைரஸ் தாக்கினால் சில உறுப்புகளில் வீக்கம் அல்லது மூட்டுவலி போன்ற நிரந்தர தாக்கம் ஏற்படும். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது மிகவும் அரிதானது என்றும் அசுத்தமான உணவை சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலமாகவோ தொற்று பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சி.என்.என். தொலைக்காட்சியின் தகவல்படி கடந்த ஆண்டு மத்தியில் லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் விலங்குகளின் பயன்பாட்டுக்கு ப்ரூசெல்லா தடுப்பூசிகள் தயாரிக்கும் போது ஏற்பட்ட கசிவால் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. கழிவு வாயுவில் இருந்து அனைத்து பாக்டீரியாவும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory