» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா. சபையின் பெண்கள் ஆணைய உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி - சீனா தோல்வி

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 7:56:17 PM (IST)

பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிங் அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் அமைப்பான பெண்கள் நிலை ஆணையம், பாலின சமத்துவம், பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வருகிறது. இது ஐ.நா.வின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்தநிலையில் பெண்கள் நிலை ஆணைய உறுப்பினர் இடத்துக்கான தேர்தல் நடந்தது.

இதில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 54 இடங்களை பெற்று உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றன. சீனா தோல்வியை சந்தித்தது.

இதுதொடர்பாக சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-"பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிங் அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியா அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவத்தை உறுதிபடுத்தியதற்கு கிடைத்த வெகுமதி மற்றும் ஒப்புதல் ஆகும். இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி” என்று தெரிவித்து உள்ளார். கடந்த ஜூன் 18-ந் தேதி ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா 8-வது முறையாக வெற்றி பெற்று தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory